Sunday, September 20, 2015

எலிவேட்டை - Scene 2

Scene 2

(வீடு - அதிகாலை கல்யாணம் :  3 மணியிருக்கும். மூர்த்தியும்அலமுவும் ஆழ்ந்த நித்திரையில். வாசலில் யாரோ உலவுவது  போல் சப்தம் கேட்கிறது. அலமு எழுந்து எட்டிப் பார்க்கிறாள்)


அலமு    :   ஏன்னாஏன்னாஎழுந்திருங்கோ... எழுந்திருங்கோன்னா

மூர்த்தி  :   (அலறியடித்து எழுந்து) என்னாச்சு.. என்னாச்சு..   யாருக்காவது ஏதாவது ஆயிடுத்தா?

அலமு   :   உங்க கரினாக்குல தர்ப்பையப் போட்டுப் பொசுக்க..   தூக்கத்துல  கூட துர்வாக்கு தான்.  வாசல்ல போய் பாருங்கோ..

மூர்த்தி  :   (மணி பார்து).. என்னடி இதுமணி 3 தான ஆறதுஏதாவது சாமிகீமி வருதா?

அலமு   :   சாமியும் இல்லபூதமும் இல்ல..  கல்யாணம்..

மூர்த்தி  :   கல்யாணமாஅகாலத்துலயாஎந்த அபஸ்மாரம் நடத்தறது?

அலமு   :   அட ஆண்டவனே.  உங்க தோஸ்த்... கல்யாணம்..

மூர்த்தி  :   யாருகடங்காரக் கல்யாணமாஇந்த நேரத்திலயா?

அலமு   :   ஆமாம்சமத்தா வாக்கிங்க் போயிண்டு இருக்கார். எலிய 
வேறக் கூட்டிண்டு..

மூர்த்தி  :   (எட்டிப் பார்த்து)  என்ன கேடுகாலத்துக்கு  இப்படி  உயிர  வாங்கறான்?  (தலையைப் பிடித்துக் கொண்டு) கடவுளே..  இதுக்கா.. இப்படி அரக்கப் பறக்க எழுப்பி விட்ட?  கல்யாணத்துக்கு   சோம்னாம்புலிசம்.. தூக்கத்துல நடக்கற வியாதி.. வியாதியை சாக்கு   வைச்சிண்டு தப்பிச்சுப்  போயிடப்போறானேன்னுபவானி மாமிகூடவே  எலியையும் துணைக்கு அனுப்பி இருக்கா.  சீக்கரமா லைட்ட ஆஃப்  பண்ணு. தூக்கக்  கலக்கத்துல நம்ம வீட்டுக்குள்ளயே நுழைஞ்சுடப்  போறான். 

(அதற்குள்  கல்யாணம் உள்ளேயே நுழைந்து விட) 

ப்ரும்மஹத்தி.. கடைசில சொன்னமாதிரி வீட்டுக்குள்ளயே வந்துடுத்து....

வாங்கோ வாங்கோ... காலங்கார்த்தால கல்யாணம்..  நல்ல சகுனம்

கல்யாணம் :  என்ன மூர்த்தி இது.. இவ்வளவு கார்த்தால எங்க வீட்டுல 
என்ன பண்றீர்?

மூர்த்தி  :  சுத்தம்... ஸ்வாமிகளே..இது எங்க வீடு... நீர்தான் கலக்கத்துல 
எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சுருக்கீர்.

கல்யாணம்:  அடேடே..  (சற்று சுதாரித்து)  ... ஆமா.. இதென்ன என் கையில ... ஏதோ சங்கிலி மாதிரி இருக்கு...

மூர்த்தி  :  குணசீலம்னு த்ருஷ்ணாப்பள்ளிக்கிட்ட ஒரு திவ்ய க்ஷேத்திரம்...   அங்கல்லாம் ஒம்ம மாதிரி ஆசாமிகளை கூட்டிண்டு வந்து இப்படித்தான்   சங்கிலி போட்டு மரியாதை பண்ணுவா..

கல்யாணம்:  கரெக்ட்..கரெக்ட்... எனக்கு எல்லாம் ஞாபத்துக்கு வந்துடுத்து.

மூர்த்தி  :  லேசா தெளிஞ்சுண்டு வருது போலருக்கு.... கவலைப்-படாதீங்கோ... முழுசாத் தெளிஞ்சுடும்..

கல்யாணம்:  மறுபடியும் நான் தூக்கத்துல நடந்துருக்கேன் போலருக்கு..   இல்ல?

மூர்த்தி  :  இல்ல இல்ல... தூக்கத்தக் கெடுத்துருக்கீர்.. அர்த்த ராத்திரில 
இப்படி அலம்பல் பண்றீரேய்யா..

கல்யாணம்:    Sorry Murthy, really sorry!  
நான் டாக்டர் ஆராமுதனைக் கூட கன்சல்ட் பண்ணிட்டேன்..

மூர்த்தி  :   என்ன சொன்னார்..?

கல்யாணம் -  எலிப்பால்ல காப்பி போட்டு  ஏழு நாள் சாப்பிடச் சொன்னார்..

மூர்த்தி  :  சாப்பிட்டா..?

கல்யாணம் :  சரியாப்பூடுமாம்..

மூர்த்தி  :  எது.. காப்பியா?

கல்யாணம் :  வ்யாதிய்யா...

(அலமு வருகிறாள்)... சித்த சும்மா இருங்கோளேன்.. பாவம்.. அவரே   என்னமோ நொந்து போயிருக்கார்..

மூர்த்தி  :  சாரி கல்யாணம்... தப்பா எடுத்துக்காதீங்கோ.. நீர் வேற எலியும்  கையுமா வந்துருக்கீர்.. சொல்றதுக்குக் கஷ்டமா இருக்கு.. இருந்தாலும்  சொல்றேன்..  லோகத்துல இப்படி எல்லாரும் பித்துப் பிடிச்சு  அலையறேளேன்னு வருத்தமா இருக்கு..பயமாவும் இருக்கு...

கொஞ்ச நாள் முன்னாடிஇப்படித்தான்.. தலையில்லாம முண்டம்  ஒண்ணு தெருத்தெருவா அலையறதுன்னு.. கதை விட்டுட்டு.. அவாவா  வீட்டுக் கதவுலல்லாம் எட்டையோ ஏழையோ.. என்ன எழவையோ..  சலவக்காரன்  குறி மாதிரி எழுதி எழுதி அழிச்சுண்டு இருந்தா...  அது பாட்டுல பொசுக்குன்னு போயிடுத்து...

அப்றம் பாருங்கோ ... புள்ளையார் பால் குடிக்கறார்னு புரளி கிளம்பி..  ஆளாளுக்கு... கிண்ணியும் கையுமா புள்ளையாரத் தொரத்திண்டு போயி.. தெகட்டத் தெகட்ட பால் போட்டி விட்டதுல............ புள்ளையாருக்கு பால்னாலயே ஓக்காளம் வர்ற மாதிரி ஆயிடுத்து...

கல்யாணம் :  நாஸ்திகம் பேசாதிங்கோ மூர்த்தி...

மூர்த்தி  :   அடப் போங்கய்யா...   ரண்டு வருஷம் முன்னாடி...   சோதரிகளுக்கெல்லாம் அடிச்சது யோகம்...பச்சைப் புடவை கட்டிக்காம   இருந்தவா பாவம்... எங்க பார்த்தாலும் பசுமைப் புரட்சி... இவ தம்பி கிச்சா   கூட எங்கருந்தோ பீறாஞ்சு  நீள அகலம் போறாம ஒரு பொடவையக்   கொடுத்துட்டுப் போனான்...யாரு தூங்கிண்டு இருந்தப்போ உருவிண்டு   வந்தானோ?

அலமு    :  ஆமாம்.. என் தம்பியக் கரிச்சுக் கொட்டறதுன்னா.. உங்களுக்கு   வெல்லம் சாப்டற மாதிரி...

கல்யாணம் :  வெல்லம் சாப்பிடாதீங்கோ மூர்த்தி... சிறங்கு வரும்...

அலமு    :  கஷ்டம்..

மூர்த்தி :ம்ம்ம்ம்.. (அதே டெம்போவில்)... எல்லாம் ஆச்சரியமா இருக்கு... ப்ரமிப்பாவும் இருக்கு.... இந்த எலிக்கு   திடும்னு வந்த மவுச பார்த்தீரோ?

கல்யாணம் :  மவுஸ்னாலேயே எலிதான ஓய்...

(அலமு சிரிக்கிறாள்)

மூர்த்தி : நீ ஒண்ணும் தேய்க்காத பல்லை பப்பறப்பேன்னுக் காட்ட  வேண்டாம்... (கல்யாணத்திடம்)  நீராவது பரவால்ல... எலியோட   அலையறீர்... அந்த  நாலாம் நம்பர் கல்லுக்குண்டு ராமானுஜம் இல்லை..?

கல்யாணம் :  இருக்காரே... நேத்திக்குக் கூட பார்த்தேனே..

மூர்த்தி :.......(அதட்டி)........ம்..
அவர் வீட்டுல என்ன திடும்னு யானை வளர்க்கறாங்க?

கல்யாணம்:   யானையா

மூர்த்தி : ஆமாம்... கூடவே  கைமுறுக்கு மாதிரி ஒரு மாவுத்தனையும்   வச்சுருக்காங்க...??

கல்யாணம்:  அடேடே... மூர்த்தி... நீர் பார்த்தது  யானையில்ல... அவங்க  ஊட்டு எலி... அவ்ளவு ஊட்டம்...கூட இருந்தது..மாவுத்தன் இல்லை...  அதான் ராமானுஜம்...ஒரு மாசமா  அவன் சோத்தையெல்லாம் எலிக்கு போட்டதுல அவன் தேஞ்சு பூட்டான்..

மூர்த்தி  :  அடக் கஷ்ட காலமே...

அலமு    :  இப்பவாவது மத்த எடத்துலல்லாம் என்ன நெலவரம்னு  தெருஞ்சுக்குங்கோ...ரொம்பத்தான் அலட்டிக்கறேளே..இன்னிலேருந்து  ஒரு காப்பி "கட்"...

மூர்த்தி  :  அடிப்பாவி... எல்லாம் என் நேரம்தான்... (க'டம்) ஆமா கல்யாணம்... இப்படி எலியும் கையுமா அலையறீரே.. கடிச்சு  கிடிச்சுத் தொலைக்கப் போறது ஓய்...எனக்குத் தெரிஞ்சு எலிக்கடிக்கு  வைத்தியமே கிடையாது... நீடாமங்கலம் பக்கத்துல  பூவனூர்னு ஒரு  கிராமம்... R.S மனோகர் ஊரு... அங்கதான் எலிக்கடிக்கு மந்த்ரிச்சு கையில மஞ்சக்கலர்ல ஒரு கயிறு கட்டுவா... ஒரு மாசம் ஜாக்கிரதையா   இருக்கணும்..

அலமு    :  அப்றம் சரியாயிடுமா?

மூர்த்தி  :  கயிறு இத்துப் போயி கீழ உழுந்துறும்... அதான் சொல்றேன்   கல்யாணத்துக்கு ஜாக்ரதையா இருங்கோன்னு...

கல்யாணம்:  என்னய்யா வெவரம் தெரியாமப் பேசறீர்... அவனவன்..    எலி   தன்னைக் கடிக்காதான்னு வாய்ல வெரல் வெச்சுண்டு அலையறான்...

மூர்த்தி  :  பேஷ் பேஷ்... லோகமே  வெரல் போட்டுண்டு அலையறதாக்கும்...

கல்யாணம் :  அட.. எலி வாய்ல  சொன்னேன்யா...எலி கடிச்சா.. LKG Admission  கிடைக்கறதா ஒரு ஐதீகம்...

மூர்த்தி  :  ரொம்ப சந்தோஷம்... எலி கடிச்சா வேலை கிடைக்கறதான்னு  விசாரிச்சு சொல்லும்...எம் மச்சினன்அதான் பாத்துருப்பேளே.. கிச்சான்னுஒரு வெறும் பய... வெட்டியாத் திரிஞ்சுண்டு இருக்கான்.. எலிதான்  கடிக்கணும்கறது இல்லை... நீர் கடிச்சாலும் ஓகே தான்... வேலை  கிடைச்சாப் போறும்..

ஆமாஒண்ணு கேக்க மறந்துட்டேன்.. ஒம்ம தம்பி ஒத்தன்ஒமக்கு  ஒத்தாசையா ஒதவாக்கரையா திரிஞ்சுண்டுருந்தானே.. அவன் இப்ப   என்ன  பண்றான்?

கல்யாணம்:  யாரு,மகாதேவனையா சொல்றீர்அவன் இப்ப பெரிய்ய  ஆளாப்  பூட்டான்யா. கஷ்கத்துல ஜோல்னாப் பைய மாட்டிண்டு தெருத் தெருவா   அலஞ்சிண்டுருக்கான்.

மூர்த்தி  :  என்னஅணில் புடிக்கிறானா?

கல்யாணம்:  ஐயமம்மல் மகாதேவன்னு பேர மாத்திண்டுஎலியப் பத்தி ஆராய்ச்சி பண்ணிடாக்டரேட் வாங்கப் போறான்.

மூர்த்தி  :  ஒ... பரவால்லயே...
(கைகளை உயர்த்தி சோம்பல் முறித்து,,, கொட்டாவி விடுகிறார்).

கல்யாணம்:  என்ன ஓய்... வாய்லயே கோட்டை கட்டறீர்... பாதாள பைரவி  போல இருக்கு...

மூர்த்தி  :  சொல்ல மாட்டீர்... இப்படி அகாலத்துல வந்து அலம்பல்  பண்றீரே ஸ்வாமி... தூக்கம் வருதுய்யா...

கல்யாணம்:  நாசூக்கா வெளீல போடான்னு சொல்றீர்... ம்... என்ன பண்றது... (எலியிடம்)  வாடா கண்ணா... போகலாம்... (பாடிக்கொண்டு)
காகித ஓடம் கடலலை மீது போவது போலே  இருவரும் போவோம்...

மூர்த்தி  :  அப்பாடா... ஒழிஞ்சது   சனி..

--O--

No comments:

Post a Comment