Sunday, September 20, 2015

எலிவேட்டை - ஒரு முன்னுரை


எலிவேட்டை - ஒரு முன்னுரை

(வேறு யாரும் எழுத முன்வராததால், நானே எழுத வேண்டிய கட்டாயத்தில் எழுதியது)

ஒரு நெடிய பஸ் ப்ரயாணத்தில், ஜன்னலோர இருக்கை கிடைக்காதது ஒரு பெரிய துக்கம். பக்கத்து இருக்கைக்காரன் எப்பவுமே பாதிக்கு மேல்தான் இடத்தை அடைத்துக் கொள்வான்.

இருக்கையில் முதுகைச் சரியாக சாய்க்க முடியாமல் ஒரு அவஸ்தை. 50ஐத் தாண்டிய ஒரு சரியான குடுமி வைக்காத மாமா, வாயில் புகையிலையை அதக்கிக் கொண்டு, தினத்தந்தி வாசித்துக் கொண்டிருந்தார். ஸ்வாரஸ்யமாக என்னமோ போட்டிருக்கிறான். ஒரு பெரிய விமான விபத்து. 200 ப்ரயாணிகள். எல்லோரும் பலி. ஒரு ப்ரயாணத்தைத் துவக்கும் போது இப்படி ஒரு செய்தியைப் பார்க்க நேர்கிறது. நான் பார்ப்பதை உணர்ந்த அவர், பேப்பரை மடித்து என் கையில் கொடுத்து, படிச்சிட்டுக் கொடுங்கோ என்றார். ஒரு ஏளனம் அவர் முகத்தில் புகையிலைச் சாறைப்போல் வழிந்து மறைந்தது.

நான் ஒரு புன்னகையில் அவரைத் தவிர்த்து, என் இருக்கையில் சற்றே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன்.

விமானம் எரிந்து கடலில் விழுவது இமை மூடின விழியில் மஞ்சள் சித்திரமாக விரிகிறது. 200 ப்ரயாணிகள்.

குழந்தைகள், கிழவர்கள், கிழத்திகள், யுவர்கள்யுவதிகள், துடிப்புடன் ஆரோக்யமாக இருப்பவர்கள், வியாதியஸ்தர்கள், படித்தவர்கள், அவ்வளவாகப் படிக்காகவர்கள், அழகானவர்கள், அதில் கர்வம் கொண்டவர்கள், அவ்வளவாக அழகு இல்லாதவர்கள், உயரமானவர்கள், குள்ளமானவர்கள், வேறு வேறு இடங்களில் பிறந்தவர்கள், வசதியானவர்கள், வசதி குறைந்தவர்கள், பெண்ணுக்குக் கல்யாணம் ஆகவில்லையென்று கவலை கொண்டவர்கள், கவலை இல்லாமல் மிகவும் சந்தோஷமாக இருப்பவர்கள், விதவிதமான உடையணிந்தவர்கள்நகை அணிந்த அல்லது அணியாத பெண்கள், பேச்சைத் தொழிலாகக் கொண்டவர்கள், மௌனம் சாதிப்பவர்கள், ஜோதிடர்கள்வேறு வேறு ஜாதிக்காரர்கள், வேறு வேறு மதங்களில் கடவுள்களில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது, நம்பிக்கை இல்லாதவர்கள், எவ்வளவு விதமான பிரிவுகளில் இருந்து வந்திருப்பார்கள்?

கூடிய மட்டும் எல்லாரும் சகுனம் பார்த்துத்தான் கிளம்பியிருப்பார்கள். பூனைகள் குறுக்கே வராமல் விரட்டப் பட்டிருக்கும். ஒற்றைப் பார்ப்பனர்கள் ஒதுங்கி இடம் கொடுத்திருப்பார்கள். தினத்தாள்களில், ராகு காலங்களும், எமகண்டங்களும், ஹோரைகளும், சூலங்களும், அதிக முக்யத்துவம் கொள்ளப்பட்டிருக்கும்.

மிதுன ராசிக்காரர்கள், துலா லக்னத்தில் பிறந்தவர்கள், புனர்பூசம் 4-ம் பாதம், விசாகம் முதல் பாதம், சுக்ர தசை சந்திரன் புக்தி செவ்வாய் அந்தரத்தில் பாக்கி 24 நாள் கொண்டவர்கள். பிறப்பில் ஒன்று சேராதவர்கள், இப்போது, இறப்பில் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.


இதற்கெல்லாம் என்ன காரணம்?


புகையிலை வழியாத ஜாக்ரதையில், பக்கத்து ஸீட் மாமா, "விதி"தான் ஸ்வாமி என்கிறார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கண் விழித்துப் பார்த்தால், அவர் பின் இருக்கை ஆசாமியிடம் அளவளாவுகிறார்.

அந்த பதில் எனக்குப் பிடித்திருந்தது. புரியாத பல புதிர்களுக்கு அது நல்ல பதிலாகவும் அமைந்து விடுகிறது. விதி என்பது ஒரு நல்ல வார்த்தை. இது, உங்களுக்கும் பிடித்துத் தான் ஆகவேண்டும். இது வாழ்க்கையில் விளையாடாவிட்டால்நீங்கள் எப்படி, இந்த "எலிவேட்டை" என்னும், நாடகத்தில் நுழைய முடியும்?




 
Ravi

Renuka


(ல)
ganeshraman





எலி வேட்டை

Murthy

Kichaa

Alamu


Bavani

Kalyanam


No comments:

Post a Comment